- செய்திகள், வணிகம்

கிலோ வெங்காயம் 30 காசு தான்.. வாங்கலையோ, வாங்கலையோ

நீமச், ஏப்.15:-

மத்திய பிரதேசத்தில் ஒரு கிலோ வெங்காயம் 30 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது. உற்பத்தி அதிகமாக உள்ள நிலையில் தேவை குறைவாக உள்ளதால் வெங்காயத்தின் விலை கடும் வீழ்ச்சி கண்டுள்ளது.

நீமச் மாநிலத்தின் முக்கிய மொத்த விலை சந்தைகளில் ஒன்று நீமச். தற்போது அமோக விளைச்சல் காரணமாக சந்தைக்கு வெங்காய வரத்து அதிகரித்துள்ளது. அதே வேளையில் தேவை குறைவாக உள்ளதால் விலை அதள பாதாளத்தில் வீழ்ந்துள்ளது.

டிகென் பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் இது குறித்து கூறியதாவது:-

கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை சந்தையில் ஒரு வெங்காயம் ரூ.15 முதல் ரூ.20 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்ேபாது 30 காசுக்கு ஒரு கிலோ வெங்காயம் விற்பனை செய்யப்படுகிறது.
இதனால் வெங்காயத்தை குப்பையில் கொட்டும் நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம். சந்தைக்கு கொண்டு வருதற்கான செலவை கூட எங்களால் பெற முடியவில்லை. நாள் ஒன்றுக்கு சுமார் 5 ஆயிரம் மூட்டைகள் இந்த சந்தைக்கு வரும். தற்போது 4 ஆயிரம் மூட்டைகளே விற்பனைக்கு வந்துள்ளது. இருப்பினும் வாங்குவதற்கு ஆட்கள் இல்லை.
நாங்கள் கிலோவுக்கு குறைந்தபட்சம் ரூ.20 முதல் ரூ.30 வரை கிடைக்கும் என்று நம்பிக்கையில் இருந்தோம். ஆனால் தற்போதைய விலை எங்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply