- கோயம்புத்தூர், செய்திகள், மாவட்டச்செய்திகள்

கிறிஸ்தவ மக்கள் முன்னேற்ற சங்கம் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு…

 

கோவை,ஏப்.13-
கோவை காந்திபுரத்தில் கிறிஸ்துவ மக்கள் முன்னேற்ற சங்கம் உள்ளது. இச்சங்கத்தின் நிறுவன தலைவர் பிரின்ஸ் ஜே.சுந்தர் கோவையில் நிருபர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் மதக்கலவரங்கள் எதுவும் நடைபெறவில்லை. தமிழக முதல்வர் ஜெயலலிதா சிறப்பான முறையில் ஆட்சி நடத்தி வருகிறார். தலித் மக்கள் கிறிஸ்துவ மதத்தைப் பின்பற்றினால் அவர்களுக்கு உரிய எந்தவித சலுகைகளையும் நிராகரிக்கக்கூடாது என ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிக்கை தமிழக முதல்வர் ஜெயலலிதா பரிந்துரை செய்து பாராளுமன்றத்திற்கு கொண்டு சென்றுள்ளார். இதற்காக அவருக்கு நன்றி தெரிவிப்பதோடு, வரும் சட்ட மன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு கிஸ்தவ மக்கள் முன்னேற்ற சங்கம் முழு ஆதரவை அளிக்கிறது என்றார். உடன் துணை செயலாளர் சாமுவேல் விஜய், கொள்கை பரப்பு செயலாளர் ரவிகாந்தன், ஜான்பீட்டர், செம்மேடு ராஜேந்திரன் இருந்தனர்.

Leave a Reply