- செய்திகள், விளையாட்டு

கிரிக்கெட்: `பயிற்சியாளருக்கு செலவு செய்வது வீண்'

 

கராச்சி, ஏப்.25

கிரிகெட்டில் பயிற்சியாளருக்கு செலவு செய்வது வீண் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அப்துல் காதிர் தெரிவித்துள்ளார்.

செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து பேசிய காதிர், கிரிக்கெட் விளையாட்டைப் பொருத்தவரை பயிற்சியாளர் என்பதே தேவையில்லை.  கேப்டன்தான் அணியை வழி நடத்திச் செல்கிறார். அவரைச் சுற்றிதான் அனைத்தும் நடக்கிறது. அப்படி இருக்கையில் பயிற்சியாளருக்காக செலவு செய்வது வீண் என்றார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பயிற்சியாளரை நியமித்து தனது பணத்தையும் சக்தியையும் வீணடிக்க வேண்டாம் என்றும் ஆலோசனை வழங்கினார். ஆசிய கோப்பை மற்றும் 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தானின் அணியின் மோசமான ஆட்டத்தை அடுத்து அந்த அணியின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து வக்கார் யூனிஸ் ராஜிநாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏதாவது ஒரு கிரிக்கெட் வீரர் பயிற்சியாளர் தேவை என்று கூறுகிறாரா என்பதை தெரிவியுங்கள் பார்ப்போம் என்றும் கிரிக்கெட்டில் வீரர்களை ஊக்கப்படுத்துவதும் ஆட்டம் தொடர்பான திட்டங்களை தீட்டுவதும் கேப்டன்தானே தவிர பயிற்சியாளர்
்அல்ல என்றும் காதிர் குறிப்பிட்டார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பயிற்சியாளருக்குப் பணத்தை வாரி வழங்குவதை கைவிட்டு, உள்ளூர் கிரிக்கெட் அமைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கும், உள்ளூர் கிரிக்கெட் வீரர்களை மேலும் திறமையானவர்களாக மாற்றுவதற்கும் பயன்படுத்தலாம் என்றும் குறிப்பிட்டார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளிநாட்டு பயிற்சியாளர்களை நியமித்துப் பார்த்தது என்றும் அதனால் எந்தப் பயனும் கிடைக்கவில்லை என்றும் காதிர் குறிப்பிட்டார்.

Leave a Reply