- கிசுகிசு, சினிமா, செய்திகள்

கிசுகிசு

தொடர்ந்து நடித்து வந்தாலும் நடிக்கும் எல்லா படத்துக்கும் டப்பிங் பேசுவதில்லை சம நடிகை. தனது நடிப்புக்கு விருது கிடைக்கும் என்கிற அளவுக்கு அவருக்குத் தோன்றினால் மட்டுமே அந்தப் படத்தில் தனது கேரக்டருக்கு பிடிவாதமாக டப்பிங் பேசுவார். ஆனால் இப்படி அவர் நம்பிக்கையுடன் பேசிய `எண்ணிக்கை' படமும் `வசந்த' படமும் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை. இதனால் டப்பிங் பேசும் ஆசையை சற்றே அடக்கி வைத்திருந்த நடிகை, தற்போது பஞ்ச் நடிகருடன் இணைந்து நடித்த படத்தில் தன் கேரக்டருக்கு தானே டப்பிங் பேசியிருக்கிறார். நடிகையின் டப்பிங்  சென்டிமென்ட் தெரிந்தவர்கள் இதை தடுக்கும்விதமாக விஷயத்தை நாயகனின் காதுக்கு கொண்டு செல்ல, அவரோ `அந்த நடிகை என்னுடன் நடித்த கூரான ஆயுதம் படம் அப்படியொரு வெற்றிப் படம். அதனால் டப்பிங் சென்டிமென்ட் விஷயமாக என்னிடம் சொன்ன இந்த விஷயம் கூட ஒருபோதும் அவர் காதுக்கு போய்விடக் கூடாது' என்று அன்புக் கட்டளையே போட்டு விட்டாராம். இந்த தகவல் நாயகியின் காதுக்கு வராமல் இருக்குமா? யூனிட் நண்பர் ஒருவர் மூலம் விஷயம் காதுக்கு வந்தபோது பஞ்ச் நடிகர் தன் மீது வைத்திருக்கும் மரியாதையை எண்ணி நெகிழ்ந்து போனாராம்.

Leave a Reply