- சென்னை, செய்திகள், மாநிலச்செய்திகள்

காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் அணை கட்டும் முயற்சியை தடுக்க வேண்டும்

சென்னை, ஜன.11-
காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் அணை கட்டும் முயற்சியை  மத்திய அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று ஜி.கே. வாசன் கோரிக்கை வைத்துள்ளார்.

இது குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

அணைகட்டும் முயற்சியை…

பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் எல்லைப் பகுதியில் ரூ. 15,000 கோடி செலவில் மிக பெரிய அணை கட்ட சீனாவுடன் பாகிஸ்தானுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. ஏற்கனவே பாகிஸ்தான் ஜீலம் நதிக்கரையில் அணைகட்ட முடிவு செய்த போது அதனை மத்திய அரசு உடனடியாக தடுத்து நிறுத்தியது. தற்போது சர்ச்சைக்குரிய ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியான ஜீலம் நதிகரையில் அணைகட்ட   ஒப்பந்தம் செய்துள்ளது கண்டிக்கத்தக்கது.

ஆசிய நாடுகளின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும்,  இந்தியாவுடனான உறவில் தொடர்ந்து விரிசல் ஏற்படுத்தும் வகையில் திட்டங்களை தீட்டுவது, தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பது, எல்லைபகுதியில் ஊடுருவல் செய்வது போன்ற பல்வேறு செயல்களில் தொடர்ந்து ஈடுபடுவது மிகவும் கண்டிக்கத்தக்கது.  எனவே அணைகட்டும் முயற்சியை மத்திய அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.

இவ்வாறு ஜி.கே. வாசன் கூறியுள்ளார்.

Leave a Reply