- செய்திகள்

காஷ்மீரில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டுமாம் பாகிஸ்தான் விதண்டாவாதம்…

இஸ்லாமாபாத், ஜூலை.29-
காஷ்மீர் விவகாரம் குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் நபீஸ் சகாரியா கூறியதாவது :-

“காஷ்மீரில் ஹூரியத் தலைவர்கள் கைது செய்யப்படுவதற்கு நபீஸ் சகாரியா கவலை தெரிவித்தார். காஷ்மீர் மனித உரிமை மீறல்கள் குறித்தும் வருத்தம் தெரிவித்த சகாரியா, அங்கு நிலவும் அசாதாரண சூழ்நிலைகளுக்கு கண்டனம் தெரிவித்தார்.
மேலும், காஷ்மீரில் ஐக்கிய நாடுகள் அவையின் கண்காணிப்பின் கீழ், பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் அனைத்து சர்வதேச கூட்டங்களிலும் காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் எழுப்பும் எனவும் தெரிவித்தார்”.

இவ்வாறு அவர் கூறி இருக்கிறார்.
——-

Leave a Reply