- செய்திகள், விளையாட்டு

காஷ்மீரின் 7 வயது சிறுமி முதல் முறையாக பங்கேற்பு உலக சப்-ஜூனியர் கிக் பாக்ஸிங் சாம்பியன் போட்டி

பந்திபோரா (ஜம்மு, காஷமீர்), ஏப்.29:-

இத்தாலியில் நடைபெற உள்ள உலக சப்-ஜூனியர் கிக் பாகிஸிங் சாம்பியன் போட்டிக்கு காஷ்மீரைச் சேர்ந்த தஜமுல் இஸ்லாம் தகுதி பெற்றுள்ளார். காஷ்மீரைச் சேர்ந்த ஒருவர் இந்தப் போட்டியில் பங்கேற்பது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தாலியில் உள்ள ஆன்ட்ரியாவில் வரும் நவம்பர் மாதம் உலக சப்-ஜூனியர் கிக் பாக்ஸிங் சாம்பியன் போட்டி நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் பங்கேற்க காஷ்மீரைச் சேர்ந்த தஜமுல் இஸ்லாம் தகுதி பெற்றுள்ளார்.

டெல்லியில் கடந்த ஆண்டு நடைபெற்ற தேசிய சப்-ஜூனியர் கிக் பாக்ஸிங் சாம்பியன் போட்டியில் பட்டம் வென்றதைத் தொடர்ந்து தஜமுல் உலகப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

இது குறித்து செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த தஜமுல்  இத்தாலிக்கு செல்ல உள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என்று குறிப்பிட்டார். டெல்லியில் உள்ள எனது தாய் எப்படி எதிரியை வீழ்த்த வேண்டும் என்று கற்றுக் கொடுத்ததாகவும் தெரிவித்தார்.
தலைநகர் ஸ்ரீநகரிலிருந்து 65 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பந்திபோராவைச் சேர்ந்த இந்த சிறுமிக்கு விருப்பமானது உஷு மற்றும் டேக் வான்டோ தற்காப்புக் கலைகள்தான்.
கடந்த ஆண்டு நடைபெற்ற மாநில அளவிலான கிக் பாக்கிஸிங் போட்டியில் இவர் தங்கம் வென்றதையடுத்து அந்த மாநிலத்தின் சிறந்த வீராங்கனையாகவும் தேர்வு பெற்றுள்ளார்.
தஜமுல் குத்துச் சண்டை வீராங்கனை மட்டும் அல்ல, சிறந்த படிப்பாளி அத்தோடு நன்றாக நடனமும் ஆடுவார். எதிர் காலத்தில் மருத்துவராக விரும்பும் இந்தச் சிறுமியின் தந்தை கட்டுமான நிறுவனத்தின் பணியாற்றுகிறார்.
ராணுவப் பள்ளியில் படிக்கும் இந்த சிறுமி இத்தாலி செல்வதற்கான செலவுகளை ராணுவத்துறை ஏற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply