- செய்திகள்

காவிரி பிரச்சினை: பிரதமர் நிரந்தர தீர்வு காண்பார் தமிழிசை நம்பிக்கை…

திருவிடைமருதூர் ஆக.9-

காவிரி பிரச்சினையில் இரு மாநிலங்களின்  உரிமையை விட்டுக் கொடுக்காமல் பிரதமர் உரிய நடவடிக்கை எடுப்பார் என தமிழிசை  சவுந்தர்ராஜன் கூறினார்.

தமிழிசை

தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் வந்தார். நெசவாளர்கள் தினத்தை முன்னிட்டு அங்குள்ள திருவள்ளுவர் பட்டு கைத்தறி நெசவாளர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-
‘‘நெசவாளர்கள் வாழ்வாதாரம் உயர குறைந்தது 5 சதவீதம் கைத்தறி ஜவுளிகளை அரசுத் துறைகள் பயன்படுத்த முன் வர வேண்டும்.

மோடி தீர்வு

பா.ஜ.கவுடன் தே.மு.தி.க. மற்றும் பா.ம.க. ஆகிய கட்சிகள் கூட்டணி வைக்காததால்தான் தமிழகத்தில் திராவிட கட்சிகளின் ஆதிக்கம் அதிகமாகி விட்டது.
உள்ளாட்சி தேர்தலில் நேர்மையான கட்சியான பா.ஜ.க.வை மக்கள் ஆதரிக்க வேண்டும். காவிரி நீர் பிரச்சினையில் தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களின் உரிமைகளை விட்டுக் கொடுக்காமல் பிரதமர் மோடி தீர்வு காண்பார்.’’
இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply