- செய்திகள்

காவிரி நதிநீர்ப் பிரச்சினை தொடர்பாக நடக்கும் பொது வேலை நிறுத்ததில் கடை அடைக்க கட்டாயப்படுத்த வேண்டாம் வெள்ளையன் கோரிக்கை…

சென்னை, ஆக.29-

காவிரி நிதிநீர்ப் பிரச்சனை தொடர்பாக நடக்கும் பொது வேலை நிறுத்ததில் வனிகர்களை கடை அடைக்க கட்டாயம் படுத்த வேண்டாம் என்று வெள்ளையன் கோரிக்கை வைத்துள்ளார்.

இது குறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

போராட்டத்துக்கு ஆதரவு

காவிரி நதிநீர்ப் பிரச்சினையில் சில விவசாயிகள் அமைப்பினர் சில அரசியல் கட்சிகளின் ஆதரவுடன் 30-ந் தேதி பொது வேலை நிறுத்தம் என்று அறிவித்துள்ளனர். ஏற்கனவே 19-ந் தேதி சில அமைப்புகள் பொது வேலை நிறுத்தம் நடத்தினர்.
இப்படி தனித்தனியான போராட்டங்களால் நமது வலுவான எதிர்ப்பைக் காட்ட முடியாமல் போய் விடும் என்பதால் ‘வேலை நிறுத்தத்தில் பங்கேற்பதில்லை’ என்றும் ‘தார்மீக ஆதரவு அளிப்பது’ என்றும் பேரவை அறிவித்தது.

30-ந் தேதி அன்று அறிவிக்கப்பட்டுள்ள பொது வேலை நிறுத்தத்தின் போதும், முந்தைய நிலைப்பாட்டுடன் வணிகர் பேரவை இப்போதும் தார்மீக ஆதரவு தெரிவித்துக் கொள்கிறது. வணிகர்களை ‘‘கடை அடைக்கச் சொல்லி கட்டாயம் படுத்த வேண்டும்’’ என்று சம்மந்தப்பட்டவர்களை இதன் மூலம் கேட்டுக் கொள்கிறோம்.

காவிரி நதிநீர் பிரச்சினையில் கர்நாடக அரசின் அடாவடித்தனத்துக்கு எதிராக உச்சநீதி மன்றத்தின் மூலம் தீர்வு காண முயலும் தமிழக அரசின் அறிவுபூர்வமான அணுகுமுறையை பேரவை வரவேற்கிறது.  ஒட்டுமொத்த தமிழகத்தின் எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் என்கிற நிலை வரும்போது தமிழக அரசே ஒரு பொது வேலை நிறுத்தத்தை அறிவித்தால், அதுதான் சாலப்பொருத்தமானதாக இருக்கும் என்பதை பேரவை தெரிவித்துக் கொள்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply