- செய்திகள், வணிகம்

‘கால் டிராப்’ விவகாரம் ‘டிராய்’க்கு டெல்லி நீதிமன்றம் நோட்டீஸ்

புதுடெல்லி, டிச. 15:-

வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் கால் டிராப்களுக்கு  செல்போன் நிறுவனங்கள் இழப்பீடு வழங்க வேண்டும் என்று டிராய் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து செல்போன் நிறுவனங்கள் தரப்பில் தாக்கல் செய்த மனுவை ஏற்று டிராய் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்ப டெல்லி உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

வாடிக்கையாளர்கள் செல்போனில் பேசிக்கொண்டிருக்கும் போது இடையே தொடர்பு துண்டிக்கப்படுவது கால் டிராப்பாகும். இந்த கால் டிராப்புக்கு 2016-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல், செல்போன் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ‘டிராய்’ கடந்த அக்டோபர் 16-ந் தேதி உத்தரவிட்டு இருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து செல்போன் சேவை நிறுவனங்கள் கூட்டமைப்பு சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. டிராயின் உத்தரவு செல்போன் நிறுவனங்களுக்கு முற்றிலும் விரோதமானது, அழிக்கக்கூடியது என்று மனுவில் செல்போன் நிறுவனங்கள் தெரிவித்து இருந்தன.

இந்த மனு நீதிபதிகள் ஜி.ரோகினி மற்றும் ஜெயந்த் நாத் ஆகிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரணை செய்த நீதிபதிகள், வரும் 22-ந்தேதிக்குள் டிராய் தரப்பில் பதில் அளிக்க உத்தரவிட்டனர்.

Leave a Reply