- செய்திகள், விளையாட்டு

கால் இறுதியில் பிரணாய், சிந்து சீன மாஸ்டர்ஸ் பாட்மிண்டன்

சாங்ஜோ, ஏப்.22:-
சீன மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பிரணாய், சிந்து இருவரும் கால் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். மேலும் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜுவாலா கட்டா மற்றும் அஸ்வினி பொன்னப்பாவும் கால் இறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

ஆடவர் ஒற்றையர் பிரிவில் பிரணாய் 21-10, 21-15 என்ற கணக்கில் மலேசியாவின் டேரன் லியூவை வென்றார். மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை சிந்து 21-9, 21-17 என்ற கணக்கில் சீன தைபேயின் சியென் யு வை வென்றார்.

மகளிர் இரட்டையர் பிரிவில் ஜுவாலா, அஸ்வினி ஜோடி 21-12, 21-12 என்ற கணக்கில் சீன தைபேயின் ஷே பே சென், உ டி ஜங்கை வென்று கால் இறுதிக்கு தகுதி பெற்றனர்.

Leave a Reply