- செய்திகள், விளையாட்டு

காலிறுதியில் போபன்னா-மெர்ஜி ஜோடி மான்டி கார்லோ டென்னிஸ்

மான்டி கார்லோ, ஏப். 15:-

மொனாகோ நாட்டில் நடந்து வரும் மான்டி கார்லோ ரோலக்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் இந்திய வீரர் ரோகன் போபன்னா,ரோமானிய வீரர் புளோரின் மெர்ஜி ஜோடி காலிறுதிக்கு தகுதிபெற்றது.

ஆடவர் இரட்டையர் பிரிவில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டத்தில் ராபர்ட் லின்ட்ஸ்டெட், அலெக்சான்டர் பெயா ஜோடியை 7-5, 7-5 என்ற நேர் செட்களில் தோற்கடித்தனர் போபன்னா, புளோரின் ஜோடி. இந்த ஆட்டம் 87 நிமிடங்கள் நடைபெற்றது. காலிறுதியில் தரவரிசையில் 4-ம் இடத்தில் உள்ள ஜேமி முர்ரே, புருனோ சோர்ஸ் ஜோடி போபன்னா,புளோரின் ஜோடி எதிர்கொள்கிறது.

Leave a Reply