- சினிமா, செய்திகள்

கார்த்தி-நயன்தாரா முதன்முதலாக ஜோடி சேரும் `காஷ்மோரா'

 

`ரவுத்திரம், இதற்குத்தான் ஆசைப்பட்டாயா பாலகுமாரா' படங்களைத் தொடர்ந்து இயக்குனர் கோகுல் இயக்கி வரும் படம் காஷ்மோரா. கார்த்தி-நயன்தாரா ஜோடியாக நடிக்கிறார்கள். கார்த்தியுடன் நயன்தாரா ஜோடி சேரும் முதல் படம் இது. இன்னொரு நாயகியாக ஸ்ரீதிவ்யா வருகிறார்.
படத்தின் முதல்பாதியை தற்கால கதைப்போக்கில் கொண்டு செல்லும் இயக்குனர், பிற்பாதியில் சரித்திர பின்னணிக்கு கதையை இடம் மாற்றி விடுகிறார். படத்தின் திருப்புமுனையே அந்த சரித்திர காட்சிகள் தான் என்பதால், பெரும் பொருட்செலவில் அரண்மனை அரங்கு அமைத்து அதில் படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள். சமீபத்தில் இந்த அரங்கில் ராஜா-ராணி கெட்டப்பில் கார்த்தி, நயன்தாரா நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன.
“படத்தில் காதல் தொடங்கி சஸ்பென்ஸ் வரை எல்லாமே உண்டு. படம் வரும்போது ரசிகர்களுக்கு நிச்சயம் இனிமையான அனுபவமாக இருக்கும்'' என்கிறார், இயக்குனர் கோகுல்.
படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

Leave a Reply