- உலகச்செய்திகள், செய்திகள்

காந்தியை மேற்கோள் காட்டியதால் டொனால்ட் ட்ரம்புக்கு சிக்கல் அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரம்

வாஷிங்டன், மார்ச். 2:- அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது, காந்தியை மேற்கோள் காட்டியதால் டொனால்ட் ட்ரம்புக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
வாக்குறுதிகள்

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு நிறைவு பெறுகிறது. இதையொட்டி இந்த ஆண்டு இறுதியில், அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில், குடியரசு கட்சி சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து இருப்பவர்களில், டொனால்ட் ட்ரம்ப் முன்னிலையில் இருக்கிறார்கள். தொடர்ந்து சர்ச்சையான கருத்துக்களை கூறி வருவதன் மூலம், அவரது பெயர் அமெரிக்காவையும் தாண்டி பல தேசங்களை சென்றடைந்து வருகிறது. முஸ்லிம்களை விமர்சனம் செய்த அவர், மசூதிகளை சோதனையிட வேண்டும் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். ‘அமெரிக்கர்களின் வேலைகளை இந்தியர்கள் பறிப்பதாகவும், அவர்களிடம் இருந்து வேலைகளை பறித்து அமெரிக்கர்களுக்கு வழங்குவேன்; அகதிகளை கட்டுப்படுத்துவதற்காக மெக்சிகோ-அமெரிக்கா இடையே சுவர் எழுப்புவேன்’ என்பன உள்ளிட்டவை ட்ரம்புடைய வாக்குறுதிகள்.

பிரசார யுக்தி

இவ்வாறு தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி, மக்கள் மனதில் தனது பெயர் நிலைத்திருக்க வேண்டும் என்பது, ட்ரம்புடைய பிரசார யுக்தியாக கூறப்படுகிறது. இந்நிலையில், சமூக வலைதளமான இன்ஸ்ட்ராகிராமில், மகாத்மா காந்தியின் கருத்து ஒன்றை வெளியிட்டார். ‘முதலில் உன்னை அவர்கள் புறக்கணிப்பார்கள்; பின்னர் உன்னை பார்த்து சிரிப்பார்கள்; தொடர்ந்து உன்னிடம் சண்டையிடுவார்கள்; அதன் பின்னர் நீ ெவற்றி பெறுவாய்’ என்று மகாத்மா காந்தி கூறியதாக, ட்ரம்ப் ெவளியிட்ட செய்தியில் கூறப்பட்டு இருந்தது.

கடும் விமர்சனம்

ஆனால் இதனை காந்தி தெரிவிக்கவில்லை. சோஷலிஸ்ட் இயக்க தலைவர் நிகோலஸ் க்ளென், கடந்த 1918-ம் ஆண்டு, இந்த கருத்தினை தெரிவித்துள்ளார். இந்நிலையில், மேற்கண்ட செய்தியை ட்ரம்ப் வெளியிட்டதை தொடர்ந்து, சமூக வலைதளங்களில் அவருக்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Leave a Reply