- செய்திகள்

‘‘கல்வி, ஒழுக்கம் இருந்தால் உயர்ந்த நிலையை அடையலாம்’’ நடிகர் சிவக்குமார் பேச்சு…

கோவை, ஜூலை27-
’கல்வி, ஒழுக்கம் இருந்தால் சமுதாயத்தில் உயர்ந்த நிலையை அடையலாம்’ என்று  பள்ளி விழாவில் நடிகர் சிவக்குமார் பேசினார்.

கல்வி தொகை வழங்கும் விழா
கோவை சூலூர் ஒன்றிய அரசு பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்க தொகை வழங்கும் விழா நடந்தது.  சூலூர் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்ற இவ்விழாவுக்கு முன்னாள் மாணவர்கள் அறக்கட்டளையின் தலைவரும், நடிகருமான சிவக்குமார் தலைமை தாங்கினார். அறக்கட்டளையின் துணைத்தலைவரும், முன்னாள் அமைச்சருமான செ.ம.வேலுசாமி முன்னிலை வகித்தார்.  பொருளாளர் நடராசன் வரவேற்று பேசினார். விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள்முருகன், மாவட்ட கல்வி அலுவலர் முருகானந்தம் உள்பட பலர் பேசினார்கள்.

அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்க தொகையாக ரூ.65 ஆயிரம் வழங்கப்பட்டது. இவற்றை நடிகர் சிவக்குமார் வழங்கினார். விழாவில் அவர் பேசியதாவது:-

உயர் நிலைக்கு வரலாம்

கல்வி, ஒழுக்கம், தேசப்பற்று இவை மூன்றும் இருந்தால் சமுதாயத்தில்  உயர்ந்த நிலைக்கு வரலாம்.   அப்துல்கலாம் மிகவும் எளிமையாக வாழ்ந்தார். சமுதாயத்தில் மிக உயர்ந்த பதவியான ஜனாதிபதி  பொறுப்பை ஏற்றார். அவர்  உயர்ந்த நிலைக்கு சென்றது கல்விதான். கல்வி தான் அனைவரையும் அடையாளம் காட்டும்.

அம்மா, அப்பா ஆகியோரை போற்றி பாதுகாக்க வேண்டும். அது போல் பள்ளியையும் பாதுகாக்க வேண்டும். நமது உடம்பையும் பேணி பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு நடிகர் சிவக்குமார் பேசினார்.

Leave a Reply