- செய்திகள், மாவட்டச்செய்திகள், விழுப்புரம்

கல்லூரி மாணவி தற்கொலை…

 

திருக்கோவிலூர்,ஏப்.12-
திருவெண்ணைநல்லூர் – திருக்கோவிலூர் சாலையில் வசித்து வருபவர் கிருஷ்ணன்  மகள் தமிழரசி (19). அங்குள்ள அரசு  கல்லூரியில் பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்தநிலையில் நேற்றுமுன்தினம் அதிகாலை வீட்டில் இருந்த எலி மருந்தை தின்று மயங்கிகிடந்தார். இதைப் பாா்த்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், அவரை மீட்டு முண்டியபாக்கம் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply