- செய்திகள், விளையாட்டு

கர்னால் பாண்ட்யா சிறப்பாக ஆடுகிறார் ரோஹித் சர்மா புகழாரம்

மும்பை, ஏப்.22:-

மும்பை அணியில் இடம் பெற்றுள்ள கர்னால் பாண்ட்யா சிறப்பாக விளையாடுகிறார் என்று அந்த அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணி நேற்று முன் தினம் நடைபெற்ற போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்தப் போட்டியில் 4 ஓவர்கள் வீசிய கர்னால் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதுவும் அணியின் முன்னணி வீரர்களான விராட் கோலி, டி வில்லியர்ஸ் விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்து.

இந்த நிலையில் அவரின் ஆட்டத்தைப் புகழ்துள்ள ரோஹித் சர்மா, குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கர்னால் விக்கெட் எதையும் வீழ்த்தவில்லை. என்றாலும் 4 ஓவர்கள் வீசிய அவர் 20 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் ஹைதரபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆட்டமிழக்காமல் 28 பந்துகளில் 49 ரன்களை எடுத்தார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நிலைமைக்கு ஏற்றவாறு கர்னால் பந்து வீசுகிறார் என்றும் இதனால் கேப்டன் என்கிற வகையில் தனது பணிச் சுமை குறைகிறது என்றும் கூறினார்.

கர்னால் பாண்ட்யா இந்திய அணியில் இடம் பெற்ற ஹர்திக் பாண்ட்யாவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply