- செய்திகள், மாவட்டச்செய்திகள்

கருணாநிதி 2 நாட்கள் வீதி வீதியாக பிரசாரம் சென்னையில்…

சென்னை, மே.4-
சென்னையில் கருணாநிதி 2 நாட்கள் வீதி வீதியாக பிரசாரம் செய்கிறார்.
சோனியாவுடன்
தி.மு.க. தலைவர் கருணாநிதி கடந்த வாரம் சைதாப்பேட்டை, மரக்காணம், புதுச்சேரி, திருவாரூர், விழுப்புரம், திண்டிவனம், செங்கல்பட்டு உள்பட பல ஊர்களுக்கு வேனில் சென்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். பொதுக்கூட்டங்களிலும் பங்கேற்று பேசினார். அதைத்தொடர்ந்து  நேற்று மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கருணாநிதி பேசினார்.

சென்னையில் நாளை (வியாழக்கிழமை) தீவுத் திடல் பொதுக்கூட்டத்தில் கருணாநிதி பங்கேற்கிறார். இதில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியும் பங்கேற்று பேசுகிறார்.
வீதி வீதியாக
6-ந்தேதி சென்னையில் வேன் மூலம் வீதி வீதியாக சென்று பிரசாரம் செய்கிறார். மாலை 4.30 மணிக்கு திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, அண்ணாநகர், அம்பத்தூர், மதுரவாயல், பூந்தமல்லி தொகுதிகளுக்கு சென்று பிரசாரம் மேற்கொள்கிறார். 7-ந்தேதி மாலை வேன் மூலம் மயிலாப்பூர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர், தாம்பரம், பல்லாவரம், ஆலந்தூர், விருகம்பாக்கம், தியாகராயநகர் சென்று வேனில் இருந்தபடி பேசுகிறார்.

8-ந்தேதி மாலை தங்க சாலை மணிக்கூண்டு பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
திருவாரூர் தொகுதியில்

11, 12 ஆகிய இரு நாட்கள் திருவாரூர் தொகுதியில் வேன் மூலம் வீதி வீதியாக வாக்காளர்களை சந்தித்து பிரசாரம் மேற்கொள்கிறார்.

14-ந்தேதி மாலை 3 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

Leave a Reply