- சென்னை, செய்திகள், மாவட்டச்செய்திகள்

கருணாநிதி அழைப்பை ஏற்று தி.மு.க கூட்டணிக்கு விஜயகாந்த் வருவார் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை

சென்னை,பிப்.14-
தி.மு.க தலைவர் கருணாநிதி அழைப்பை ஏற்று விஜயகாந்த் தி.மு.க. கூட்டணிக்கு வருவார் என்று நம்புவதாக மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னயைில் தி.மு.க.தலைவர் கருணாநிதி-காங்கிரஸ் மேலிடத் தலைவர் குலாம் நபி ஆசாத் ஆகியோர் சந்திப்புக்கு பின் தி.மு.க.-–காங்கிரஸ் கூட்டணி நேற்று உறுதியானது. இதையடுத்து சென்னை கோபாலபுரத்தில் உள்ள தி.மு.க.தலைவர் கருணாநிதியின் இல்லத்தில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
நல்ல முடிவு எடுப்பார்
தி.மு.க.வும், காங்கிரசும் கூட்டணி அமைப்பது தொடர்பாக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான குலாம்நபி ஆசாத் தி.மு.க. தலைவர் கருணாநிதியுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். தி.மு.க. தலைமையில் தேர்தலை சந்திப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. தி.மு.க. தலைமையிலான ஆட்சி அமைய அவர்கள் உறுதி அளித்துள்ளனர். தொகுதி பங்கீடு குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை.
தே.மு.தி.க.வரும்
தி.மு.க. கூட்டணிக்கு தே.மு.தி.க. வரவேண்டும் என்று ஊடகங்கள்் மூலம், தி.மு.க.தலைவர் கருணாநிதி ஏற்கனவே அழைப்பு விடுத்துள்ளார். அந்த அழைப்பே போதுமானது என்று கருதுகிறோம். அதனை ஏற்று விஜயகாந்த் வரும் போது நல்ல முடிவு ஏற்படும். அவர் நல்ல முடிவை எடுப்பார் என்று நம்புகிறோம். புதுச்சேரி சட்டமன்ற தேர்தலிலும் இதே கூட்டணி தொடரும்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

Leave a Reply