- செய்திகள், மதுரை, மாவட்டச்செய்திகள்

கருணாநிதியை பற்றி கருத்து சொன்னதற்கு திருமாவளவனும், ராமகிருஷ்ணனும் மன்னிப்பு ேகட்க விடாமல் தடுத்தனர் வைகோ பேச்சு…

மதுரை, ஏப்.18- கருணாநிதியை பற்றி நான் கருத்து தெரிவித்ததற்கு மன்னிப்பு  கேட்க விடாமல் திருமாவளவனும், ராமகிருஷ்ணனும் தடுத்தனர் என்று வைகோ கூறினார்.
வைகோ
மதுரை ஓபுளா படித்துறையில் நேற்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தே.மு.தி.க., மக்கள் நலக்கூட்டணியை ஆதரித்து  பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
பத்திரிகையாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் ஒரு முக்கியமான தகவலை தெரிவிக்கிறேன். தி.மு.க. தலைவர் கருணாநிதியை வேறு தொழில் செய்யுங்கள் என்று நான் கூறினேன். எனது தாயார் மீது சத்தியமாக வேறு எண்ணத்தில் நான் கூறவில்லை. நான் அவ்வாறு கூறியிருந்தால் எனது நாக்கு அழுகட்டும். நான் நாசமாக போய் விடுவேன். நான் அன்று பேட்டி கொடுத்தபோது விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளனும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ராமகிருஷ்ணனும் என்னை மன்னிப்பு கேளுங்கள் என்று கூறியதாக செய்தி வெளியிட்டிருந்தனர். அவர்கள் அவ்வாறு கூறவில்லை.
தடுத்தனர்
நான் பேசியதற்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்கிறேன் என்று எழுதி பத்திரிகைகளுக்கு அறிக்கை கொடுத்தேன். அப்போது உடனிருந்த ராமகிருஷ்ணனும், திருமாவளனும் மன்னிப்பு கேட்க வேண்டாம். தவறுதலாக பேசி விட்டேன் என்று கூறுமாறு சொல்ல சொன்னார்கள். நான் அவர்களிடம் கண்டிப்பாக மன்னிப்பு தான் கேட்க வேண்டும் என்று உறுதிபட கூறினேன்.  அதன் அடிப்படையில் தான் பகிரங்க மன்னிப்பு கேட்கிறேன் என்று அறிக்கை வெளியிட்டேன்.  இதை நான் மதுரை பொதுக்கூட்டத்தில் பகிரங்கமாக தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு வைகோ பேசினார்.

Leave a Reply