- செய்திகள், மாவட்டச்செய்திகள்

கருணாநிதியுடன் இளங்கோவன் திடீர் சந்திப்பு…

 

சென்னை, ஏப்.12-

தி.மு.க. தலைவர் கருணாநிதியை சென்னை கோபாலபுரம் இல்லத்தில் காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் நேற்று காலை திடீரென சந்தித்து பேசினார். அப்போது. த.மா.கா.வில் இருந்து விலகி பீட்டர் அல்போன்ஸ் காங்கிரசுக்கு வருகிறார். அவருக்கு தொகுதி வேண்டும் என்றும், அரவக்குறிச்சி தொகுதி குறித்தும் இருவரும் பேசியதாக கூறப்படுகிறது. அப்போது பீட்டர் அல்போன்ஸ்க்கு தனியாக தொகுதி ஒதுக்க முடியாது கடையநல்லூர் தொகுதி ஒதுக்கவேண்டும் என்றால் கூட்டணி கட்சியுடன் பேசி ஒதுக்குவதற்கு நடவடிக்கை எடுக்கலாம் என்றும், அரவக்குறிச்சி தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்க வாயப்பு இல்லை என்று கருணாநிதி கூறினார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

Leave a Reply