- செய்திகள்

கருகல் நோயால் 300 ஏக்கர் நெற்பயிர் நாசம்…

 

திருவண்ணாமலை, ஆக. 25-

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் அதிகரித்து வருகிறது. இந்த வெயிலால் மக்கள் மட்டுமின்றி வேளாண் பயிர்களும் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகி விவசாயிகளும் வேதனையில் தள்ளப்பட்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில செய்யாறு, வெம்பாககம், வந்தவாசி ஒன்றியங்களில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்களை பாக்டீரியா இலைகருகல் நோய் தாக்கியுள்ளது. இந்நோய் பாதிப்பால் நெற்பயிர் குருத்துகளின் ஓரம் வளைந்து நெளிந்த அலைபோன்ற மஞ்சள் கலந்த வெண்மை அல்லது தங்க நிற மஞ்சள் நிரத்தில் காய்ந்து காணப்படுகிறது. மாவட்டத்தில் மொத்தம் 300 ஏக்கரில் பயிரிட்டுள்ள நெற்பயிர்கள்  பாக்டீரியா இலைகருகல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. நெற்பயிர்கள் பாக்டீரியா நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதால் விவசாயிகள் கடும் வேதனையடைந்துள்ளனர்.

Leave a Reply