- செய்திகள், வணிகம்

கப்பலை தொடர்ந்து விமானம் தயாரிப்பில் ரிலையன்ஸ்

உள்நாட்டில் பயணிகள் விமானங்களை  தயாரிக்க அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 50 முதல் 80 பயணிகள் அமரும் வகையில், உக்ரைனின் அன்டோனோவா நிறுவனத்துடன் கூட்டு வர்த்தக அடிப்படையில் விமானங்களை இந்த நிறுவனம் தயாரிக்க உள்ளது.

இதற்கு முன் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல்ஸ் நிறுவனம் பயணிகள் விமான தயாரிப்பில்  ஈடுபட்டு வந்தது. இருப்பினும் பல்ேவறு காரணங்களால் விமான தயாரிப்பை நிறுத்தி விட்டது. அது முதல் கடந்த 25 ஆண்டுகளாக எந்தவொரு உள்நாட்டு நிறுவனமும் விமான தயாரிப்பில் ஈடுபடவில்லை.

இந்த நிலையில் தற்போது பயணிகள் விமானம் தயாரிப்பில் ரிலையன்ஸ் களம் இறங்குகிறது.  அனில் அம்பானிக்கு சொந்தமாக கப்பல் கட்டும் நிறுவனம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply