- சினிமா, செய்திகள்

கதை தான் முக்கியம்

ஸ்ரீதிவ்யா கையில் இப்போது `காஷ்மோரா, மருது, பென்சில்' என 3 படங்களே இருக்கின்றன. இதில் ஜீ.வி.பிரகாஷூடன் ஜோடி சேர்ந்த `பென்சில்' எப்போதோ திரைக்கு வந்திருக்க வேண்டிய படம். இப்போது தான் படத்தை திரைக்கு கொண்டு வரும் முயற்சியில் இருக்கிறார்கள். அடுத்தமாதம் திரைக்கு வருகிறது `பென்சில்'. அடுத்தது கார்த்தி நடித்த `காஷ்மோரா' படம். இதில் ஸ்ரீதிவ்யாவுடன் நயன்தாராவும் இருக்கிறார். நயன்தாரா இருக்கும் படத்தில் ஸ்ரீதிவ்யாவுக்கு பெரிதாக அப்படியென்ன கேரக்டர் இருக்கப் போகிறது என்ற கேள்வி எழும் தானே. அதற்கு ஸ்ரீதிவ்யாவின் பதில் ஆச்சரியமாக இருக்கிறது. “படத்தை பார்க்கும்போது என் கேரக்டர் எத்தனை வெயிட்டானது என்பதை புரிந்து கொள்வீர்கள்'' என்கிறார். அடுத்தது முத்தையா இயக்கத்தில் விஷால் ஜோடியாக நடிக்கும் `மருது' படம். இந்த படத்தில் மீண்டும் கிராமத்துப் பெண்ணாக வருகிறாராம். மறுபடியும் `ஊதா கலரு  ரிப்பன்' அளவுக்கு பெயர் வாங்கித் தருமாம் இந்தப் படம்.
`புதிய படங்கள்?' ஸ்ரீதிவ்யாவைக் கேட்டால், “கதை கேட்டுக் கொண்டிருக்கிறேன். கதையும் என் கேரக்டரும் பிடித்தால் உடனே நடிக்க ஒப்புக்கொண்டு விடுவேன். அப்படி 2 படங்களை ஒ.கே. பண்ணியிருக்கிறேன்'' என்கிறார்.

Leave a Reply