- சென்னை, செய்திகள், மாவட்டச்செய்திகள்

கட்சித் தலைவர்கள் அஞ்சலி விஜயதாரணியின் கணவர் உடலுக்கு

சென்னை, மார்ச் 7-
விஜயதாரணியின் கணவர் உடலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.

கணவர் மரணம்

காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணியின் கணவர் சிவகுமார் கென்னடி (50). மாரடைப்பால் நேற்று முன்தினம் திடீரென்று மரணம் அடைந்தார். அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொது செயலாளராக நியமிக்கப்பட்ட விஜயதரணி டெல்லியில் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றிருந்தார். கணவர் மரணம் அடைந்த தகவல் அறிந்ததும் உடனடியாக சென்னை திரும்பினார்.

சிவகுமார் கென்னடியின் உடல் முகலிவாக்கம் அருகே உள்ள பூத்தபேட்டில் அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. கட்சி நிர்வாகிகளும், முக்கிய பிரமுகர்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

தலைவர்கள் அஞ்சலி
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் அஞ்சலி செலுத்தி விஜயதாரணி மற்றும் அவரது குழந்தைகளுக்கு ஆறுதல் கூறினார்கள்.

அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு, மகளிர் காங்கிரஸ் பொது செயலாளர் ஹசீனாசையத், மாவட்ட தலைவர்கள் வி.ஆர்.சிவராமன், ரங்கபாஷ்யம், ஜேம்ஸ் மற்றும் சுமதி அன்பரசு உள்பட பலர் அஞ்சலி செலுத்தினார்கள். சிவகுமார் கென்னடியின் உடல் தகனம் இன்று (திங்கட்கிழமை) நடைபெறுகிறது.

Leave a Reply