- கடலூர், செய்திகள், மாவட்டச்செய்திகள்

(கடலூர்)162 வழக்குகளுக்கு தீர்வு கடலூர் மாவட்ட மக்கள் நீதிமன்றத்தில்…

கடலூர், ஏப்.11-
கடலூர் மாவட்ட மக்கள் நீதிமன்றத்தில்,162 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
மக்கள் நீதிமன்றம் முகாம்
கடலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், தொழிலாளர் நீதிமன்ற வழக்குகள், குடும்ப வழக்குகள் மற்றும் விபத்து காப்பீடு வழக்குகள் தொடர்பாக, மக்கள் நீதிமன்றம், கடலூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான பி.தனபால் தலைமை வகித்து முகாமினை துவக்கி வைத்தார். சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் மாவட்ட நீதிபதி குமணன் முன்னிலை வகித்தார்.

மகளிர் நீதிமன்ற நீதிபதி செல்வம், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி சாமுண்டீஸ்வரிபிரபா, கூடுதல் மகளிர் நீதிமன்ற நீதிபதி சரவணபாபு, மோட்டார் வாகன விபத்து வழக்குகளின் சிறப்பு சார்பு நீதிபதி கணேசன் மற்றும் வழக்குரைஞர்கள் பங்கேற்றனர். கடலூர், விழுப்புரம், கும்பகோணம் அரசு போக்குவரத்துக்கழக அலுவலர்கள் பங்கேற்றனர்.
162 வழக்குகளுக்கு தீர்வு
இதில், மோட்டார் வாகன விபத்து வழக்குகள் 120, குடும்ப வழக்குகள் 6, சிவில் வழக்குகள் 20, காசோலை வழக்குகள் 5, ஜீவனாம்ச வழக்கு 1, வங்கி வழக்குகள் 8 என மொத்தம் 162 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டது. இதில், மொத்தம் ரூ.2.52 கோடி இழப்பீட்டுத் தொகையாக வழங்க உத்தரவிடப்பட்டது.விவாகரத்துக் கேட்டு தொடரப்பட்டு வழக்குகளில் 6 தம்பதிகள் சமரசமாகி மீண்டும் ஒன்று சேர்ந்தனர்.
முகாமில், சட்டப்பணிகள் ஆணைக்குழு ஓய்வுப்பெற்ற முதுநிலைநிர்வாக உதவியாளர் மரியலூயிஸ், முதுநிலை நிர்வாக உதவியாளர் ரெங்கநாதன், இளநிலை நிர்வாக உதவியாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Leave a Reply