- கடலூர், செய்திகள், மாவட்டச்செய்திகள்

(கடலூர்) தேர்தல் அலுவலகம் திறப்பு கடலூரில் பாரதிய ஜனதா கட்சி…

கடலூர்.ஏப்.11-
கடலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அலுவலக திறப்பு விழா, கடலூர் சூரப்பன்நாயக்கன் சாவடியில் நேற்று நடைபெற்றது. மாவட்டப் பொதுச் செயலாளர் துறைமுகம் செல்வம் தலைமையில், மாவட்டத் தலைவர் ராஜரத்தினம் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். கடலூர் சட்டமன்ற பொறுப்பாளர் முரளி வரவேற்றார். மாவட்ட அமைப்புச் செயலாளர் ஆர்.பி செல்வம் முன்னிலை வகித்தார்.
அப்போது மாவட்டத் தலைவர் ராஜரத்தினம் கூறியதாவது:  மோடியின் 2 சாதனைகளை மக்கள் மத்தியில் எடுத்துக்கூறி வாக்குகள் சேகரிப்போம். கடலூர் விழுப்புரம் மாவட்டத்திற்கு 3 தேர்தல் பிரசார வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. கடலூர் மாவட்டத்தின் அனைத்து கிராமங்களிலும், இந்த  வாகனங்கள் விஜயம் செய்யும். அந்த வாகனத்தில், மோடியின் திட்டங்களும், சாதனைகளும் அடங்கிய படக்காட்சி ஒளிபரப்பப்படும். உடன் செல்லும் பேச்சாளர்கள் தேர்தல் பிரசாரம் மேற்கொள்வார்கள்.மோடியின் சாதனைகள், தூய்மையான கட்சி இமேஜ், இவற்றை கருத்தில் கொண்டு தமிழக மக்கள் பா.ஜ.க வுக்கு ஆதரவு அளிப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply