- கடலூர், செய்திகள், மாவட்டச்செய்திகள்

(கடலூர்)வாலிபர் பலி மோட்டார் சைக்கிள் மோதி…

சிதம்பரம், ஏப். 11-

பரங்கிப்பேட்டை அருகே உள்ள மேட்டுக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் குமரவேல்(வயது 34).  இவர் நேற்று முன்தினம் பு.முட்லூர்  ஜவுளிக்கடை பேருந்து நிறுத்தம் அருகே நின்றுகொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார்சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த குமரவேல், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரியில் சேர்க்கப்பட்டார். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.  அங்கு அவர் நேற்று இறந்தார். இது குறித்து குமரவேலுவின் மனைவி லோகநாயகி, பரங்கிப்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply