- கடலூர், செய்திகள், மாவட்டச்செய்திகள்

(கடலூர்)பிளஸ்-2 மாணவி மாயம் வடலூர் அருகே…

நெய்வேலி,  ஏப்.16-

கடலூர் மாவட்டம், வடலூர் மேட்டுக்குப்பம் முருகன் கோவில் தெருவை சேர்ந்த தனசேகரனின் மகள் சிந்தனைச்செல்வி (வயது 17). இவர் வடலூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், 12-ம் வகுப்பு தேர்வு எழுதி விட்டு, வீட்டுக்கு வந்தார். சம்பவத்தன்று இரவு, வீட்டில் தூங்கி கொண்டிருந்த சிந்தனைச்செல்வியை, அதிகாலையில் காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால், குறிஞ்சிப்பாடி காவல் நிலையத்தில் தனசேகரன் புகார் செய்தார். அதில், புவனகிரி தெற்கு திட்டை சேர்ந்த அருள்செல்வன், தனது மகளை கடத்தி சென்றிருக்கலாம் என சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave a Reply