- கடலூர், செய்திகள், மாவட்டச்செய்திகள்

(கடலூர்)அமைச்சர் சம்பத் வாக்கு சேகரிப்பு கடலூரில் வீடு வீடாகச் சென்று…

கடலூர்.ஏப்.11-
கடலூர் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர்  சம்பத், கடலூரில் வீடு வீடாகச் சென்று, தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.
வீடு வீடாகச் சென்று பிரசாரம்
கடலூர் தொகுதியில் போட்டியிடும்  அ.தி.மு.க.  கிழக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான  சம்பத், நேற்று கடலூர் சாவடியில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். முன்னதாக அவர் தேர்தலில் வெற்றிபெற வேண்டி, கடலூரில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களான திருவந்திபுரம் தேவநாதசாமி கோவில், கடலூர் பாடலீஸ்வரர்கோவில், திருப்பாதிரிப்புலியூர் வீரஆஞ்சநேயர் கோவில், உள்ளிட்ட கோவில்களில் சாமிதரிசனம் செய்து பிரசாரம் மேற்கொண்டார்.

பின்னர் அவ, கட்சி நிர்வாகிகளுடன், சாவடிப்பகுதியில் சாலையோரம் உள்ள கடை மற்றும் வீடுகளுக்கு சென்று, துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்து, ஆதரவு திரட்டினார். மாவட்ட அவைத்தலைவர் அய்யப்பன், மருத்துவர் அணி மாநில துணை செயலாளர் டாக்டர் சீனுவாசராஜா, நகர செயலாளர் குமரன், ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, உள்ளிட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

படம் எண் 1
கடலூரில் அமைச்சர் சம்பத்  பொதுமக்களிடம் துண்டுபிரசுரம் வழங்கி வாக்கு சேகரித்தார்.

Leave a Reply