- செய்திகள்

கடமலைக்குண்டு பகுதியில் பழங்குடி பெண்களிடம் வனத்துறையினர் தவறாக நடக்கவில்லை அமைச்சர் சீனிவாசன் தகவல்…

சென்னை, ஜூலை.29-
கடமலைக்குண்டு பகுதியில் பழங்குடி பெண்களிடம் வனத்துறையினர் தவறாக நடந்துக் கொள்ளவில்லை என்று அமைச்சர் சீனிவாசன் கூறினார்.
பாலியல் தொந்தரவு
தேனி மாவட்டம் மேகமலையில் உள்ள கடமலைக்குண்டு மலைவாழ் பெண்களுக்கு வனத்துறை அதிகாரிகள் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறி மலைவாழ் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சோதனை என்ற பெயரில் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் கூறினர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விவகாரம் தொடர்பாக சட்டமன்றத்தில் ேநற்று தி.மு.க. எம்.எல்.ஏ. ஆஸ்டின் கேள்வி எழுப்பினார்.
இதற்கு வனத்துறை அமைச்சர் சீனிவாசன் பதில் அளித்து பேசியதாவது:-
தவறாக நடக்கவில்லை
கடமலைக்குண்டு பழங்குடி பெண்களிடம் வனத்துறை அதிகாரிகள் தவறாக நடந்ததாக கூறப்படுவது தவறு. வனச்சரக அலுவலக பொருட்களை பழங்குடி மக்கள் சேதப்படுத்தியதாகவும், அவர்கள் தாக்கியதில் வன ஆய்வாளர் சுபாஷ் காயம் அடைந்துள்ளார்.
மேகமலையில் எறும்புதின்னிகள் கடத்தப்பட்டதாக புகார் வந்ததால் வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதிகாரிகள் மீதான புகார் குறித்து கோட்டாட்சியர் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. இதில் அதிகாரிகள் மலைவாழ் பெண்களிடம் தவறாக நடந்துகொள்ளவில்லை. விசாரணை மட்டுமே நடத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டது
இவ்வாறு அமைச்சர் சீனிவாசன் தெரிவித்தார்.

Leave a Reply