- செய்திகள், வணிகம்

கடன் பத்திரங்கள் ஒதுக்கீடு வாயிலாக ரூ.4.6 லட்சம் கோடி திரட்டிய நிறுவனங்கள்

பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
கடந்த 2015-16-ம் நிதி ஆண்டில் நம் நாட்டு நிறுவனங்கள் தனிப்பட்ட முறையில் கடன்பத்திரங்கள் ஒதுக்கீடு (2,975 வெளியீடுகள்) செய்து மொத்தம் ரூ.4.60 லட்சம் கோடி திரட்டி உள்ளன. இது முந்தைய நிதி ஆண்டைக் காட்டிலும் சுமார் 13 சதவீதம் அதிகமாகும். அந்த நிதி ஆண்டில் நிறுவனங்கள் இந்த வழிமுறையில் மொத்தம் ரூ.4.04 லட்சம் கோடி  (2,611 வெளியீடுகள்) திரட்டி இருந்தன. பொதுவாக வர்த்தக விரிவாக்க நடவடிக்கைகள், நடைமுறை மூலதன செலவின தேவைகளுக்காக இது போன்ற வழிமுறைகளில் நிறுவனங்கள் நிதி திரட்டுகின்றன.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply