- செய்திகள், வணிகம்

கடந்த 3 வர்த்தக தினங்களில் தங்கம் பவுனுக்கு 224 ரூபாய் உயர்ந்தது

சென்னை, பிப்.4:-
தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது. கடந்த 3 வர்த்தக தினங்களில் அதன் விலை பவுனுக்கு 224 ரூபாய் அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் பவுனுக்கு 40 ரூபாய் உயர்ந்தது.
தை மாதம் பிறந்து விட்டாலே கல்யாண சீசன் தொடங்கி விடும். இதனால் தங்கத்துக்கான தேவையும் அதிகரிக்கும். இந்நிலையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பும் வீழ்ச்சி கண்டுள்ளதால் தங்கத்தின் விலை கிடுகிடுவென ஏற்றம் கண்டு வருகிறது. கடந்த சனிக்கிழமையன்று 20 ஆயிரத்து 272 ரூபாயாக இருந்த ஒரு பவுன் தங்கத்தின் விலை கடந்த 3 வர்த்தக தினங்களில் 224 ரூபாய் அதிகரித்து 20 ஆயிரத்து 496 ரூபாயாக உயர்ந்துள்ளது.
சென்னையில் தங்கத்தின் விலை கிராமுக்கு 5 ரூபாய் அதிகரித்து 2 ஆயிரத்து 562 ரூபாயாக உயர்ந்தது. தங்கம் பவுனுக்கு 40 ரூபாய் அதிகரித்து 20 ஆயிரத்து 496 ரூபாயாக உயர்ந்தது.

வெள்ளியின் விலையும் நேற்று உயர்ந்தது. வெள்ளியின் விலை கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து 37 ரூபாய் 70 காசுகளாகவும், கிலோவுக்கு 285 ரூபாய் அதிகரித்து 35 ஆயிரத்து 260 ரூபாயாகவும் ஏற்றம் கண்டது.

Leave a Reply