- செய்திகள், வணிகம்

கடந்த 10 ஆண்டுகளில் முதல்முறையாக ‘பொருளாதாரச் சரிவில் இருந்து மீள்வோம்’- ஜெனட் ஏலன் நம்பிக்கை

வாஷிங்டன், டிச. 18:-

கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறையாக அமெரிக்க மத்திய பெடரல் வங்கி, தனது வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் உயர்த்தியுள்ளது. இதன் மூலம், கடந்த 7 ஆண்டுகளாக ஏற்பட்ட கடும் நிதி நெருக்கடியில் இருந்து அமெரிக்க பொருளாதாரம் மீண்டும் வரும் என்று பெடரல் வங்கியின் தலைவர் ஜெனட் ஏலன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பொருளாதாரம் சீர்குலைவு
கடந்த 2006-ம் ஆண்டில் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார பெருமந்தம், வீட்டுக்கடன் வங்கியால் ஏற்பட்ட பொருளாதாரச்சீர்குலைவு ஆகியவற்றால் அமெரிக்க பெடரல் வங்கி வட்டி வீதத்தை பூஜ்ஜியமாக குறைத்தது. இதனால், கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக கடனுக்கான வட்டி அதிகரிக்கப்படவில்லை. இப்போது உலக அளவில் பொருளாதார சூழலில் மீட்சி ஏற்பட்டுள்ள நிலையிலும், கடந்த 7 ஆண்டுகளை ஒப்பிடும் போது தற்போது அமெரிக்காவில் வேலையில்லா திண்டாட்டம்  5 சதவீதமாக குறைந்துள்ளது சாதமாக மாற்றத்தை நோக்கி நடைபோடத் தொடங்கியுள்ளதை காட்டியது.  இதையடுத்து கடனுக்கான வட்டி வீதத்தை சிறிதளவு உயர்த்த அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி தீர்மானித்தது.

வட்டி உயர்வு
இதையடுத்து வாஷிங்டனில் உள்ள பெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவர் ஜேனட் ஏலன் தலைமையில் இருநாட்கள் கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தின் முடிவில் கடந்த 10 ஆண்டுகளில் முதல்முறையாக வட்டிவீதம் 0.25 சதவீதம் உயர்த்தப்பட்டது.

இது குறித்து பெடரல் வங்கியின் தலைவர் ஜேனட் ஏலன் வௌியிட்ட அறிவிப்பில் கூறியதாவது:
அமெரிக்காவில் பொருளாதாரச் சூழல், வேலைவாய்ப்பின்மை ஆகியவற்றில் சாதகமான முன்னேற்றம் இருப்பதைக் காண்கிறோம். லட்சக்கணக்காண அமெரிக்க மக்களின் பொருளாதாரம் முன்னேற்ற நிலைக்குச் சென்றுள்ளது. வருவாய் உயர்ந்துள்ளது, வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது.

இதையடுத்து, கடனுக்கான வட்டிவீதத்தை 0.25 சதவீதம் முதல்கட்டமாக உயர்த்த பெடரல் வங்கியின் வெளிச்சந்தை குழு முடிவு எடுத்துள்ளது. இந்த முடிவின் மூலம், பொருளாதாரம் எதிர்காலத்தில் ஸ்திரத்தன்மை அடையும் என்று குழு நம்புகிறது. பொருளாதார மீட்சி நிலை நீண்டகாலத்தில்தான் இருக்கும். தொழிலாளர் சந்தையிலும் முன்னேற்றம் இருக்கும்.  இந்த வட்டி அதிகரிப்பின் மூலம் பொருளாதாரத்தில் முன்னேற்றம் இருந்தால், தொடர்ந்து வட்டி விகிதம் அதிகரிக்கப்படும்.
பாதிப்பு இருக்காது
எதிர்காலத்தில் பொருளதார முன்னேற்றம் எப்படி இருக்கும், வேலையின்மை நிலை, பணவீக்கம் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து, எதிர்கால நிதிக்கொள்கை அமையும். அமெரிக்க பெடரல் வங்கியின் வட்டி வீத உயர்வு குறித்து வளரும் நாடுகளுக்கு முன்கூட்டியே நன்றாகத் தெரிவிக்கப்பட்டு, அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆதலால் வளரும் நாடுகளின் சந்தையில் பெடரல் வங்கியின் நடவடிக்கை எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply