- செய்திகள், வணிகம்

கடந்த நிதியாண்டில் நாட்டின்

புதுடெல்லி, ஏப். 5:-

நாட்டின் காபி ஏற்றுமதி கடந்த நிதியாண்டில் 13.39 சதவீதம் உயர்ந்து 3 லட்சத்து 19 ஆயிரத்து 733 டன்னாக அதிகரித்துள்ளது.

இது குறித்து மத்திய காபி வாரியத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில் “ கடந்த 2015-16ம் நிதியாண்டில் நாட்டின் காபி ஏற்றுமதி முந்தைய ஆண்டைக் காட்டிலும் 13.39 சதவீதம் அதிகரித்து 3 லட்சத்து 19 ஆயிரத்து 733 டன் ஆக உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டில் காபி ஏற்றுமதி 2 லட்சத்து 81 ஆயிரத்து 987 டன்னாக மட்டுமே இருந்தது.

மதிப்பின் அடிப்படையில்  கடந்த நிதியாண்டில் ரூ. 5 கோடியே 204 கோடிக்கு காபி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டில் ரூ.4 ஆயிரத்து 877 கோடிக்கு மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டு இருந்தது '' என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply