- உலகச்செய்திகள், செய்திகள்

கடந்த ஆண்டு கணக்கெடுப்பின்படி ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் தகவல்

லண்டன், ஏப்.7:- கடந்த ஆண்டு கணக்கெடுப்பின்படி, உலகளவில் மரண தண்டனை நிறைவேற்றம் 50 சதவீதம் அதிகரித்து உள்ளதாக, ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து தலைநகர் லண்டனை மையமாக கொண்டு, ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் எனும் சர்வதேச மனித உரிமை அமைப்பு செயல்பட்டு வருகிறது. சர்வதேச அளவில் மனித உரிமை பாதுகாக்கும் விதமாக, இந்த அமைப்பு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக, இலங்கையில் இறுதிக்கட்ட போரின்போது நடந்த மனித உரிமை மீறல் குறித்து, ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் பல்வேறு தகவல்களை வெளியிட்டது. இந்நிலையில், மரண தண்டனை நிறைவேற்றம் 50 சதவீதம் அதிகரித்துள்ளதாக அந்த அமைப்பு கூறியுள்ளது. இதுகுறித்து, ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் வெளியிட்டுள்ள அறிக்ைகயில் கூறப்பட்டுள்ளதாவது:-

2015-ல் 61 நாடுகளில், 1,998 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இவற்றில் சீனா, ஈரான், பாகிஸ்தான், சவூதி அரேபியா, அமெரிக்கா ஆகிய நாடுகளில்தான் மரண தண்டனை அதிகமாக நிறைவேற்றப்பட்டுள்ளது
2014-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, மரண தண்டனை நிறைவேற்றம் 2015-ல் 54 சதவீதம் அதிகரித்துள்ளது. சீனாவில் அதிகளவு நிறைவேற்றப்பட்ட போதிலும், அதற்கான காரணங்களை அந்நாட்டு அரசு வெளியிடவில்லை. 2014, டிசம்பர் 16-ந்தேதியன்று, பாகிஸ்தானின் பெஷாவர் ராணுவ பள்ளியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதன் பின்னர், மரண தண்டனை நிறைவேற்றுவதில் உள்ள சிக்கல்கள் நீக்கப்பட்டு, அதிகளவு மரண தண்டனை அங்கு நிறைவேற்றப்பட்டு வருகிறது. 2015-ல் அங்கு 326 பேருக்கு மரண தண்டனைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் ஒருவருக்கு மட்டுமே மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. உலகளவில், 140 நாடுகள் மரண தண்டனைக்கு தடை விதித்துள்ளன. இது மொத்த நாடுகளில் மூன்று இரண்டு பங்கு ஆகும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply