- செய்திகள், மாவட்டச்செய்திகள்

கஞ்சா கடத்திய 2 பேருக்கு 10 ஆண்டு சிறை…

 

சென்னை, ஏப்.23-
சென்னைக்கு வெளியிடங்களில் இருந்து கஞ்சா கடத்தப்பட்டு வருவதாக போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து கடந்த 2010-ம் ஆண்டு மார்ச் 27-ந் தேதி சென்னை வடபழனி போலீஸ் நிலையம் அருகே போலீசார் வாகனங்களை கண்காணித்து வந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வேனை நிறுத்தி சோதனை செய்த போது அதில் 2 ஆயிரத்து 30 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வேனில் இருந்த கார்த்திகேயன் (வயது 32), பவுண்பாண்டியன் (51) ஆகியோரை கைது செய்தனர். கடத்தல் தொடர்புடைய சிலர் தலைமறைவாகி விட்டனர்.
எனவே இந்த 2 பேரும் மட்டும் சென்னையில் உள்ள போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. நீதிபதி எஸ்.கோமதி இந்த வழக்கை விசாரித்து நேற்று தீர்ப்பு வழங்கினார். அதில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் கார்த்திகேயனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.3 லட்சம் அபராதமும், பவுண் பாண்டியனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.2 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

Leave a Reply