- செய்திகள்

ஓ.ராஜா மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு பூசாரியை தற்கொலைக்கு தூண்டியதாக…

திண்டுக்கல், ஜூலை.29-

கடந்த 2012-ல் தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசபட்டி கைலாசநாதர் கோவில் பூசாரி நாகமுத்து, தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இவரை தற்கொலைக்கு தூண்டியதாக அமைச்சர் பன்னீர் செல்வத்தின் தம்பியும்,  பெரியகுளம் நகராட்சித் தலைவருமான ராஜா மற்றும் தென்கரை பேரூராட்சிதலைவர் பாண்டியன் உள்ளிட்ட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு திண்டுக்கல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. ஓ. ராஜா உள்பட 6 பேரும் நீதிபதி முன்பு ஆஜராகினர். இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி பூர்ணிமா வருகிற ஆகஸ்ட் 22-ந் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Leave a Reply