- செய்திகள், மாநிலச்செய்திகள்

ஓடிசா மாநிலத்தில் 116 டிகிரி வெயில் மகாராஷ்ட்ராவில் 114 டிகிரி வெயில் ெகாழுத்துகிறது

புவனேசுவரம், ஏப்.23-

வட மாநிலங்களில் அனல் காற்றும் வெயிலும் மக்களை வறுத்ெதடுக்கின்றன. ஒடிசா மாநிலத்தில் 116 டிகிரி வெயில் சுட்டெரிக்கிறது. இதேபோல மகாராஷ்ட்ர மாநிலத்தில் 114 டிகிரி வெயில் கொளுத்துகிறது.

116 டிகிரி வெயில்

அக்னி நட்சத்திரம் எனப்படும் சுட்ெடரிக்கும் வெயில் வரும் மே மாதம் முதல் வாரம் தொடங்க உள்ள நிலையில் ஆந்திரா உள்பட வட மாநிலங்களில் இப்போதே வெயில் 110 டிகிரியை தாண்டி மக்களை பாடாய் படுத்தி வருகின்றன. மக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத அளவு அனல் காற்று மக்களை வறுத்தெடுக்கிறது. வட மாநிலங்களில் வெயிலுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம்  உள்ளது.

இந்நிலையில் நேற்று ஒடிசா மாநிலத்தில் வெயிலின் உக்கிரம் கடுமையாக இருந்தது. அங்கு 116.7 டிகிரி வெயில் சுட்ெடரிப்பதால் பகல் நேரங்களில் மக்கள் வெளியே நடமாட்டம் இல்லாமல் தெருக்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. அனல் காற்றும் வீசுகிறது.

114 டிகிரி வெயில்

கடும் வறட்சியால் பாதிக்கப்பட்ட மகாராஷ்ட்ர மாநிலத்தில் 114 டிகிரி வெயில் கொளுத்துவதால் அங்கு மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நாகபுரியிலும்,  வார்தாவிலும் 113 டிகிரி வெயில் சுட்டெரிக்கிறது. குடிநீர் பஞ்சமும் அம்மாநிலத்தில் தலைவிரித்தாடுவதால் மக்களை பெரும் சிரமத்துக்கு ஆளாகி இருக்கிறார்கள்.

Leave a Reply