- செய்திகள், விளையாட்டு

ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்பட்டது

 

ஆன்சியன்ட் ஒலிம்பியா (கீரிஸ்). ஏப்.22:-

ரியோ டி ஜெனிரோ ஒலிம்பிக் போட்டிக்கான ஜோதி நேற்று கோலாகலமாக ஏற்றப்பட்டது.

31-வது ஒலிம்பிக் போட்டி பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனிரோவில் வரும் ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி தொடங்கி 21-ம் தேதிவரை நடக்கிறது. இந்தப் போட்டியில் 28 விளையாட்டுகளில் 306 பிரிவுகளுக்குப் போட்டிகள் நடக்கிறது. இதுவரை 168 நாடுகள் தகுதி பெற்றுள்ளன.

இந்த நிலையில் ஒலிம்பிக் போட்டிக்கான ஜோதி முதல் ஒலிம்பிக் போட்டி நடைபெற்ற கீரிஸ் நாட்டில் உள்ள 2600 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஹெரா கோயிலில் முன் ஏற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் தலைவர் தாமஸ் பச் மற்றும் ரியோ ஒலிம்பிக் அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக கிரீஸ் நாட்டு நடிகை கேத்தரீனா,முதலாவதாக ஓட்டத்தை தொடங்கிய கிரீஸ் நாட்டின் ஜிம்னாஸ்டிக் வீராங்கனையும் உலக சாம்பியனுமான லெப்டெரிஸிடம் வழங்கினார்.  லெப்டெரிஸ், பிரேசிலின் கைப்பந்து வீரர் ஜியோவானேவிடம் அடுத்து வழங்கினார்.

இந்த ஒலிம்பிக் ஜோதியை பிரேசில் முழுவதுமாக 12 ஆயிரம் ஏந்திச் செல்ல உள்ளனர்.

முன்னதாக, ஒலிம்பிக் ஜோதியை ஏற்றுவதற்காக 1896-ம் ஆண்டில் முதல் ஒலிம்பிக் போட்டி நடைபெற்ற ஏதென்ஸில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஸ்டேடியத்தில் பிரேசில் அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது.

Leave a Reply