- செய்திகள், விளையாட்டு

ஒலிம்பிக்குக்கு கோஷ்,மணிகா தகுதி டேபிள் டென்னிஸ்

புதுடெல்லி, ஏப். 15:-

ஹாங்காங்கில் நடந்த ஆசிய தகுதிச்சுற்றில் இந்திய வீரர் சவுமியாஜித் கோஷ், வீராங்கனை மணிகா பத்ரா வெற்றிபெற்றதையடுத்து, ரியோ நகரில் நடக்கும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளனர்.

ஆடவருக்கான ஏ பிரிவில் நடந்த ஆட்டத்தில் இந்திய வீரர்கள் சவுமியாஜித் கோஷ், சரத்கமல், அந்தோனி அமல்ராஜ் மற்றும் ஹர்மீத் தேசாய் இடம் பெற்று இருந்தனர். இதில் சவுமியாஜித் கோஷ் தான் மோதிய 3 ஆட்டங்களிலும் வென்று முதலிடம் பிடித்து ஒலிம்பிக் போட்டிக்கு தகுதியானார்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சரத்கமல் ஒரு  வெற்றி மட்டுமே பெற்றார். இருந்தபோதிலும், அவர் தரவரிசை அடிப்படையில் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மகளிர் பிரிவில், இந்திய வீராங்கனை மணிகா பத்ரா முதல்போட்டியில் சகநாட்டு வீராங்கனை பூஜாவிடம் தோல்வி அடைந்தாலும், ஷாமினி, மவுமா தாஸ் ஆகியோருடனான ஆட்டங்களில் வெற்றி பெற்றார். இதையடுத்து அவர் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்றார்.

Leave a Reply