- செய்திகள், விளையாட்டு

ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதே இலக்கு-தீபா

 

ரியோ டி ஜெனிரோ, ஏப்.20:-
ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வதே தனது அடுத்த இலக்கு என்று இந்தியாவைச் சேர்ந்த ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர் தெரிவித்துள்ளார்.

திரிபுராவைச் சேர்ந்த ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா, வரும் ஆகஸ்டில் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இந்தியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் ஜிம்னாஸ்டிக் போட்டிக்கு தகுதி பெறுவது இதுவே முதல் முறை.

இந்த நிலையில், ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றால் நன்றாக இருக்கும்  பதக்கம் வெல்வதே தனது இலக்கு என்றும் குறிபிட்டுள்ளதாக சர்வதேச ஜிம்னாஸ்டிக் சம்மேளனத்தின் பேஸ் புக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

52 ஆண்டுகளுக்குப் பின் இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் ஜிம்னாஸ்டிக் போட்டிக்கு முன்னேறுவது இதுவே முதல் முறையாகும்.

இந்திய சுதந்திரம் அடைந்தபின் 1952-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் ஜிம்னாஸ்டிக்கில் 2 பேரும் 1956-ல் 3 பேரும் 1964-ல் 6 பேரும் பங்கேற்றனர். அதன் பின் அதாவது 52 ஆண்டுகளுக்குப்பின் இந்தியாவைச் சேர்ந்த தீபா கர்மாகர் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply