- செய்திகள், விளையாட்டு

ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே இலக்கு- மேரி கோம்

 

ஹைதராபாத், ஏப்.23:-
ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வதே இலக்கு என்று ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்றவரும் 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவருமான குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம் தெரிவித்துள்ளார்.

ஹைதராபாதில் உள்ள கன்ட்ரி கிளப்பின் விளம்பரத் தூதராக மேரி கோம் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் ஹைதராபாத் வந்த அவர்,  கஜகஸ்தானில் நடைபெற உள்ள உலக சாம்பியன் போட்டியில் சிறப்பாக போட்டியிட்டு ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதற்காக கடுமையான பயிற்சி மேற்கொண்டுவருவதாக குறிப்பிட்டார்.
ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று அதில் தங்கம் வெல்வதே தனது கனவு என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக ஆசிய தகுதிப் போட்டியில் மேரி கோம் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறவில்லை. இந்த நிலையில் உலக சாம்பியன் போட்டியில் திறமையை நிரூபித்து ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவேன் என்றார்.
மேரி கோம் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதற்கு உலக சாம்பியன் போட்டிதான் கடைசி வாய்ப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply