- செய்திகள், தேசியச்செய்திகள்

ஐ-போன்கள் விலையை உயர்த்தியது ஆப்பிள்…

 

புதுடெல்லி, ஏப்.24:-

இந்தியாவில் ஐ-போன்கள் (16 ஜி.பி. வெர்ஷன்) விலையை 29 சதவீதம் வரை ஆப்பிள் நிறுவனம் அதிகரித்துள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போனுக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் உலகம் எங்கும் உள்ளது. அண்மையில், இந்நிறுவனம் புதிய மாடல் `ஐ-போன் எஸ்.இ.' ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இந்தியாவில் இதற்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில்  ஐ-போன் 5எஸ், 6, 6எஸ் ஆகிய ஸ்மார்ட்போன்களின் விலையை ஆப்பிள் அதிரடியாக உயர்த்தியுள்ளது.

ஆப்பிள் நிறுவனம் தற்போது 16 ஜி.பி. வெர்ஷன் ஐ-போன்கள் விலையை மட்டும் உயர்த்தியுள்ளது. `ஐ-போன் 5எஸ்' விலையை 22 சதவீதம் (ரூ.4,000) அதிகரித்து  ரூ.22 ஆயிரமாக அதிகரித்துள்ளது. `ஐ-போன் 6' விலையை ரூ.9 ஆயிரம் அதிகரித்து (29 சதவீதம்) ரூ.40 ஆயிரமாக நிர்ணயம் செய்துள்ளது. `ஐ-போன் 6எஸ்' விலையை 19 சதவீதம் அதிகரித்து (ரூ.7,500) ரூ.48 ஆயிரமாக உயர்த்தியுள்ளது. அதே சமயம் `ஐ-போன் எஸ்.இ.' விலையை மாற்றம் இன்றி வைத்துள்ளது.

மேலும், கடந்த காலாண்டில் (ஜனவரி-மார்ச்) வழங்கிய சில சலுகைகளை திரும்ப பெற ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Leave a Reply