- விளையாட்டு

ஐ.பி.எல் போட்டிகளை இலவசமாக வழங்க ரிலையன்ஸ் ஜியோ திட்டம்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் , அரபு நாட்டில் நடக்கும் ஐபிஎல் கிரிகெட் போட்டிகளை இலவசமாக நேரலை செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.ஜியோ மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் இணைந்து ஐபிஎல் 2020 கிரிகெட் போட்டிகளை ஜியோ வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த சேவை தேர்வு செய்யப்பட்ட பிரீபெயிட் சலுகைகள் மற்றும் ஜியோ ஃபைபர் பிராட்பேண்ட் சலுகைகளுடன் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

தற்போதைய தகவல்களின் படி ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ. 401 மற்றும் ரூ. 2599 பிரீபெயிட் சலுகைகளில் இலவச ஸ்டிரீமிங் சேவையை வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே இந்த இரண்டு சலுகைகளிலும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா வழங்கப்பட்டு வருகிறது.ஜியோ ஃபைபர் பயனர்களை பொருத்தவரை ரூ. 849 மற்றும் அதற்கும் அதிக தொகை கொண்ட சலுகைகளில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் விஐபி சேவைக்கான வருடாந்திர சந்தா இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

எனினும், இதில் இலவச ஐபிஎல் ஸ்டிரீமிங் வழங்குவது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.எனினும், ஜியோ ரூ. 401 மற்றும் ரூ. 2599 என இரண்டு ஜியோ பிரீபெயிட் சலுகைகள் மற்றும் ஜியோ ஃபைபர் ரூ. 849 மற்றும் அதற்கும் அதிக விலை கொண்ட சலுகைகளுடன் இலவச ஐபிஎல் 2020 ஸ்டிரீமிங் சேவை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply