- உலகச்செய்திகள், செய்திகள்

‘ஐ.எஸ். தீவிரவாதிகளை அடியோடு ஒழிப்பதுதான் என் முதல் வேலை’

வாஷிங்டன், ஏப். 7:- ஐ.எஸ். தீவிரவாதிகளை அடியோடு ஒழிப்பதுதான் தனது முதல் வேலை என்று, அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.

நாட்டின் உயர் ராணுவ அதிகாரிகளுடன் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்திய பின்னர், ஒபாமா அளித்த பேட்டி:- துருக்கி மற்றும் பெல்ஜியத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை பார்த்தோம். எந்தவொரு அபாயகரமான தாக்குதல்களை நடத்தும் சக்தி அவர்களுக்கு உள்ளது. ராஜ தந்திரம், உளவுத் திறமை மற்றும் ராணுவ நடவடிக்கை மூலமாக, நமது கூட்டுப்படைகள் ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்த வேண்டும். சிரியாவின் ரக்காவிலும், ஈராக்கின் மொசூலிலும் அவர்கள் தங்களுடைய தலைமை அலுவலகத்தை அமைத்துள்ளார்கள். அவர்களுடைய இரக்கமற்ற செயல்களை நம்மால் பொறுத்துக் கொள்ள முடியாது. அவர்களை அடியோடு ஒழிப்பதுதான் எனது முதல் வேலை. ஐ.எஸ். தீவிரவாதிகளை நிச்சயமாக நாங்கள் வீழ்த்துவோம். அவர்களது தலைவர்களை, பொருளாதாரங்களை, அடிப்படை கட்டமைப்புகளை நாங்கள் தரை மட்டமாக்குவோம். இவ்வாறு ஒபாமா பேசினார்.

அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆஷ் கார்ட்டர் பேசும்போது, இதுவரைக்கும் தீவிரவாதிகளுக்கும் கூட்டுப்படைகளுக்கும் இடையே நடந்த போரை பார்க்கும்போது, நமது நடவடிக்கைகள் ேமலும் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்பது அவசியம் ஆகிறது. திட்டம், உளவுத் தகவல்கள், புள்ளிவிவரங்கள் என அனைத்து பிரிவுகளிலும் நாம் இன்னும் நுட்பமாக செயல்பட வேண்டும் என்றார்.

Leave a Reply