- செய்திகள், வணிகம்

ஐரோப்பாவில் மந்த நிலையால் ஏற்றுமதி குறைந்தது

 

நாடாளுமன்ற மக்களவையில் தொழில், வர்த்தக துறை அமைச்சர் நிர்மாலா சீதாராமன் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமான பதிலில் கூறியிருப்பதாவது:-
கடந்த சில காலமாக நம் நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சி பின்னடைவு கண்டு வருகிறது. ஐரோப்பிய நாடுகளில் நிலவும் பொருளாதார மந்தநிலை, சீனாவின் வளர்ச்சி குறைந்தது, சர்வதேச சந்தையில் பொருட்கள், பெட்ரோலிய கச்சா எண்ணெய் ஆகியவற்றின் விலை சரிந்தது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஏற்றுமதி குறைந்துள்ளது.
கடந்த நிதி ஆண்டின் முதல் 9 மாதங்களில் சிறப்பு பொருளாதார மண்டலங்களில் இருந்து ரூ.3.41 லட்சம் கோடிக்கு ஏற்றுமதி நடைபெற்றுள்ளது. குஐராத் மாநில சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அதிக அளவாக ரூ.1.06 லட்சம் கோடிக்கு ஏற்றுமதி செய்துள்ளன. அடுத்து ரூ.55,479 கோடிக்கு தமிழ்நாட்டு சிறப்பு பொருளாதார மண்டலங்கள் ஏற்றுமதி செய்துள்ளன. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலங்கள் ரூ.51,777 கோடிக்கு ஏற்றுமதி செய்துள்ளன.

Leave a Reply