- செய்திகள், விளையாட்டு

ஐபிஎல் போட்டிகளை வெளிநாட்டில் நடத்த கூடாது-கும்ப்ளே

 

திருவனந்தபுரம், ஏப்.28:-
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை வெளிநாட்டில் நடத்தக் கூடாது என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரம், கார்யவட்டத்தில் உள்ள கிரீன் பீல்ட் ஸ்டேடியத்தில் கும்ப்ளேயின் பயிற்சி நிறுவனமான டென்விக் சார்பில் நேற்று முதல் முறையாக இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதையொட்டி நடந்த தொடக்க விழாவில் கலந்து கொண்ட போது பேசிய கும்ப்ளே, ஐபிஎல் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதால் நமது நாட்டுக்கு அதிக அளவில் வருமானம் கிட்டுகிறது என்றும் ஆகையால் அந்தப் போட்டிகளை வெளிநாட்டில் நடத்தக் கூடாது என்றும் தெரிவித்தார்.

அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகளை வெளிநாட்டில் நடத்துவது குறித்து யோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய செயலாளர் அனுராக் தாகுர் கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தார்.

தேர்தல் காரணமாக ஏற்கெனவே 2009-ல் அனைத்து போட்டிகளும் தென் ஆப்பிரிக்காவில் நடத்தப்பட்டது. 2014-ல் முதல் 15 நாள் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது.

Leave a Reply