- செய்திகள், விளையாட்டு

ஐபிஎல்: டு பிளெசிஸ் இனி விளையாடமாட்டார்

 

புதுடெல்லி, ஏப்.29:-
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் ரைசிங் சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள தென் ஆப்பிரிக்க வீரர் டு பிளெசிஸ் இனி இந்தப் போட்டியில் விளையாட மாட்டார்.

இந்த தகவலை அவர் தனது டுவிட்டர் இணைய தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

புனே சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியைச் சேர்ந்த இரண்டாவது வீரராக டு பிளெசிஸ் போட்டியிலிருந்து விலகியுள்ளார். ஏற்கெனவே இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் தசைப் பிடிப்பு காரணமாக அணியிலிருந்து விலகிவிட்டார்.

தன்னுடைய விரலில் ஏலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால் ஐபிஎல் போட்டியிலிருந்து விலக வேண்டிய துரதிர்ஷ்டம் ஏற்பட்டுள்ளதாக டு பிளெசிஸ் தெரிவித்துள்ளார். எலும்பு முறிவு குணமாக இன்னும் 6 வாரங்கள் ஆகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புனே அணியில் டுபிளெசிஸ் 6 போட்டிகளில் விளையாடிய 206 ரன்களை எடுத்தார். அந்த அணியில் அதிகபட்ச ரன்கள் எடுத்தவர் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார் டு பிளெசிஸ்.

இதனிடையே தென் ஆப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள், ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு போட்டியிலும் டுபிளெசிஸ் பங்கேற்பது சந்தேகம் எனத் தெரிகிறது.

Leave a Reply