- செய்திகள், விளையாட்டு

ஐபிஎல்:கெவின் பீட்டர்சன் இனி விளையாட மாட்டார்

 

புனே, ஏப்.25:-
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் மீதமுள்ள ஆட்டங்களில் ரைசிங் புனே சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள பீட்டர்சன் விளையாட மாட்டார்.
கடந்த 22-ம் தேதி புனேயில் பெங்களூரு, புனே அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது. அப்போது பீட்டர்சனுக்கு வலது காலின் பின்புறத்தில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் போட்டியிலிருந்து ஓய்வு பெற்றார்.
தனது இன்ஸ்டாகிராம் சமூக வலை தளத்தில் பீட்டர்சன் இது குறித்து குறிப்பிட்டுள்ளார்.
இப்போது இந்தியாவிலிருந்து விடை பெறுகிறேன். கிரிக்கெட்டில் காயம் ஏற்படுவது என்பது சகஜம்தான். பின்னங்காலில் கடுமையான வலியாக உள்ளது. சக தோழர்களை விட்டுப் பிரிந்து செல்வது வருத்தமாகத்தான் உள்ளது. ஆனால் நிச்சயம் எனது குடும்பத்தாருடன் இந்தியாவுக்கு திரும்பி வருவேன் என்று வேதனையோடு குறிப்பிட்டார்.
செய்தியோடு சக்கர நாற்காலியில் வலியோடு அமர்ந்துள்ள படத்தையும் பீட்டர்சன் வெளியிட்டுள்ளார்.

காயம் அடைந்தவுடன் அவருக்கு ஸ்கேன் செய்யப்பட்டது. அதில் அவர் கடுமையாக காயம் அடைந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply